உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் நேற்றையதினம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.,
வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசினால் 3 தசாப்தங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புப் போரின் ஒரு முக்கிய குறியீடு தான் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி.
இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியை குடித்து சாவிலிருந்து தப்பியவர்கள் சிலர் இன்னமும் நம் மத்தியில் வாழ்கிறார்கள்.
அவர்களது துயர அனுபவம் வருங்கால சமுதாயத்தினருக்கு விளக்கிப் பகிரப்பட வேண்டியதொன்று.
உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறலாகும். தற்போது பல்வேறு இடங்களில் இடம் பெற்று வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாற்ற நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் தடுக்க முயல்லது குறிப்பாக கிழக்கில் சம்பூர் பகுதியில் இந்நிகழ்வுகளில் பங்கெடுத்தவர்களை இரவிரவாகக் செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருப்பது மிக மோசமான மனித உரிமை மீறலாகும்.
ஒரு பக்கத்தில் இப்படியான மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுக்கொண்டு மறுபக்கத்தில் காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் செயற்பாடுகளையும், இவங்களுக்கான நல்லினக்க செயற்பாடுகளை முடுக்கி விடுவது எல்லாம் வெறும் போலி நாடகமே, சர்வதேசத்தைத்திருப்திப்படுத்த அரங்கேற்றப்படும் நாடகங்களேயன்றி வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
‘‘திருகோணமலை, மூதூர் - சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்கள் விரைவில் பிணையில் விடுவிக்க வழி செய்யப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்துள்ளனார்.
அது தொடர்பாக பொதுப் பாதுகாப்பு அமைக்க டிரான் அலஸ் உரிய தரப்புகளுக்கு வழிகாட்டல் விடுத்திருக்கின்றார்.” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாதம் இறுதி வாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.