எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலனை!

எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார்.இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ”எரிபொருள் விலைகள் தொடர்பாக பொதுமக்கள் ஏதேனும் சலுகைக் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் மத்திய அரசு உடனடியாக விலைக் குறைப்பை செய்துவிடும்.அதுபோலவேநவம்பர் 2021ஆம் ஆண்டு எரிபொருள்கள் மீதான விலை  அளவுக்குக் குறைக்கப்பட்டது” எனவும் அவர் கூறியுள்ளார்.ரஷ்ய- உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கூறப்படுகின்ற நிலையில், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.