டேன் பிரியசாத்தின் கொலையில் தொடர்புடையதாக தற்போது சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத் அண்மையில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் மோதலில் ஈடுபட்டவர்களின் உறவினர்களான தந்தையும் மகனுமே டேன் பிரியசாத்தவை சுட்டு கொலை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத், நேற்று முன்தினம் இரவு, வெல்லம்பிட்டியின் சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சித செவன அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
இந்த சம்பவத்தில் வெலிவேரிய மாவட்டத்தைச் சேர்ந்த பந்துல பியால், மாதவ சுதர்ஷன என்ற தந்தை மற்றும் மகன் ஆகியோருக்கும் இடையேயான தொடர்பைக் குறிக்கும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய தந்தை மற்றும் மகன் வெளிநாடு செல்வதைத் தடைசெய்யும் உத்தரவைப் பிறப்பிக்கவும், அவர்களின் தொலைபேசி பதிவுகளை சம்மன் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நேற்று நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதேவேளை, டேன் பிரியசாத்தின் சகோதரர் பிரகாஷ் நிலினாவும் பல ஆண்டுகளுக்கு முன்பு கூர்மையான ஆயுதத்தால் அடித்துக் கொல்லப்பட்டதை பொலிஸார் நீதிமன்றத்தில் கூறினர்.
இது தொடர்பாக குறித்த தந்தை மற்றும் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.