இத்தாலியில் கோர விபத்து : குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் பலி


வடக்கு இத்தாலியின் வெனிஸ் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கேம்ப்கிரவுண்டிற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் குழந்தைகள் உள்ளடங்கலாக 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவிகின்றனர்.

பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பற்றியதால் பாலத்திலிருந்து விலகி புகையிரத பாதைக்கு அருகில் விழுந்து விபத்து சம்பவித்துள்ளது

பேருந்திலிருந்து எரிபொருள் கசிந்ததில் பேருந்து தீப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயினை அணைத்ததாகவும், இந்நிலையில் பயணிகளை மீட்க வேண்டியும் இருந்ததால் பெரும் சவாலுக்கு உள்ளதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.