பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.குயின் படத்தின் மூலம் தனது நடிப்பிற்காக மிகவும் பிரபலமானவர். தற்போது எமர்ஜென்சி என்ற படத்தில் தானே இயக்கும் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.
மணிகர்னிகா பிளிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது இன்ஸ்டாகிரம் பதிவில்,“வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. டெங்குவிலும் படத்தில் நடிப்பது என்பது ஆர்வத்தை தாண்டியும் பித்து நிலை” எனக் கூறியிருந்தனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            