பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம் : தரவையில் பதிவான மிக மோசமான சம்பவம்

பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம், நேற்றையதினம் மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வின் போது பதிவானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தகவல் தொழிநுட்பம் வளர்ந்துள்ள இந்த காலப்பகுதியில், சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் அனைத்தும் உடனுக்குடன் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகின்ற இந்தக் காலப்பகுதியிலே இவ்வளவு அராஜகம் இருக்கும் என்று சொன்னால் 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் எவ்வாறான அராஜகங்கள் இடம்பெற்றிருக்கும்.

நேற்றையதினம் அது தெளிவாகத் தெரிந்தது.

கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்திலே கூட இவ்வளவு அராஜகங்கள் இருந்ததில்லை. ஆனால் 2023ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் இவ்வளவு அராஜகங்கள் மாவீரர் தினமன்ற இடம்பெற்றுள்ளது. இதனை நாங்கள் கண்ணால் பார்த்துள்ள விடயம் என குறிப்பிட்டுள்ளார்.