கிளிநொச்சியில் புதையல் தேடிய அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தேடிய அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் இருப்பதாகக் கூறி இன்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற அனுமதியுடன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் 17 அடி வரை அகழ்வுப் பணிகள் நடைபெற்றது.

இவ் அகழ்வுப் பணிகள் கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் துபராகினி ஜெகநாதன் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரி மற்றும் கிராம சேவையாளர் காவல்துறையினர், சிறப்பு அதிரடிப்படையினர் ஆகியோரின் மேற்பார்வையில் இரண்டு இயந்திரங்கள் மூலம் அகழ்வுப் பணி நடைபெற்றது.

அகழ்வு இடம்பெற்ற இடத்தில் எந்தவித தடையங்களோ கிடைக்கப்பெறவில்லை.

இதையடுத்து எதிர்வரும் 22ஆம் திகதி 9.00 மணி அளவில் மீண்டும் அகழ்வுப் பணி தொடரும் என நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.