கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி : களத்திற்கு சென்ற தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள்


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இன்று (14)எட்டாவாது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றைய அகழ்வாய்வின் போது பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட குழுவினர் வருகை தந்து அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமையில் (06) இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.