எரிபொருள் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பேக்கரி பொருட்களின் விலைகளை திருத்தும் அளவுக்கு எரிபொருள் விலை குறைப்பு கணிசமானதாக இல்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.