கனடாவில் அதிகரித்து செல்லும் கருணைக்கொலை- வெளியாகிய அதிர்ச்சி தகவல் |


கனடாவில் கடந்த ஆண்டு மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் கருணைக்கொலை தொடர்பில் மிகவும் எளிதான விதிகளைக் கொண்டுள்ள நாடு கனடா. இதனாலேயே இங்கு ஒவ்வொரு ஆண்டும் கருணைக்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகம்.

2021ல் மட்டும் கனடாவில் 10,000 பேருக்கும் மேல் கருணைக் கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமன்றி, கனடாவில் பதிவான மரணங்களில் இது 3% என்றே கூறப்படுகிறது.

மேலும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பு எனவும் தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு, இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும், உளவியல் பாதிப்பால் அவதிப்படும் மக்களை கருணைக்கொலை செய்துகொள்ள கனடா அனுமதிக்க இருப்பதாகவே கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் பலர் தங்கள் அனுபவங்களையும், கருணைக்கொலை செய்துகொள்ள ஆலோசனை அளிக்கப்பட்டதையும் சாட்சியப்படுத்தியுள்ளனர்.

2016ல் கனடாவில் மருத்துவ காரணங்களுக்காக கருணைக்கொலை செய்துகொண்டவர்கள் எண்ணிக்கை 1,000 என பதிவாகியுள்ள நிலையில், 2021ல் இந்த எண்ணிக்கை 10,000 ஆக கடந்துள்ளது. 

கனடாவில் எளிமையான விதிகள் இருப்பதால், கருணைக்கொலை செய்துகொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்றே கூறப்படுகிறது. மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும், விதிகளுக்கு உட்பட்டு கருணைக்கொலைக்கு அனுமதிக்க கனடா விவாதித்து வருகிறது.

மட்டுமன்றி, 2017 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வில்,மருத்துவ உதவியினால் கருணைக்கொலை அனுமதிக்கப்படுவதால் கனடாவில் சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களை ஆண்டுக்கு $137 மில்லியன் குறைக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது.