ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு செய்யப்பட்ட அல்லது ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள விமானங்களுக்கான ஐரோப்பிய ஒன்றிய வான்வெளியை நாங்கள் மூடுகிறோம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.தன்னலக்குழுக்களின் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட, அத்தகைய அனைத்து விமானங்களும் இப்போது எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் தரையிறங்கவோ, புறப்படவோ அல்லது பறக்கவோ முடியாது.பிரித்தானிய வான்வெளியில் ரஷ்ய விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனைத்தொடர்ந்து, ரஷ்யாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான எயிரோஃப்ளோட், ஞாயிற்றுக்கிழமை பழிவாங்கும் நடவடிக்கையில் மறு அறிவிப்பு வரும் வரை ஐரோப்பிய இடங்களுக்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்வதாகக் கூறியது.இந்த முடிவுக்கு முன்னதாக, ஐரோப்பிய நாடுகள் தங்கள் வான்வெளியை ஒவ்வொன்றாக மூடிக் கொண்டிருந்தன. ஜேர்மனி தனது தடை மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று கூறியது.ரஷ்யாவின் எஸ் 7 எயார்லைன்ஸ் தனது பல ஐரோப்பிய இடங்களுக்கான விமானங்களை குறைந்தது மார்ச் 13ஆம் திகதி வரை இரத்து செய்வதாக பேஸ்புக்கில் தெரிவித்துள்ளது.