எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே கூறலாம்.
அப்படி சினிமா துறையில் பல ஆண்டுகளாக இருந்தும் ஒரு பெயரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தவர் மாரிமுத்து, ஒருவழியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் அவருக்கு பெரிய பெயர் வாங்கி கொடுத்தது.
அந்த சந்தோஷத்தில் மாரிமுத்து தனது கனவு வீடு வாங்கி அதை அழகாக கட்டி வந்துள்ளார், விரைவில் குடிபோகவும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் அதற்குள் மாரிமுத்துவின் காலம் முடிந்துள்ளது.
இப்போது அவர் இறந்ததில் இருந்து ஆதி குணசேகரனாக இனி நடிக்கப்போவது யார் என்ற கேள்வி அதிகம் வலம் வருகிறது. சீரியல் குழுவினர் நடிகர் வேல ராம மூர்த்தியிடம் கேட்டுள்ளனர், அவர் இன்னும் ஓகே சொல்லவில்லையாம்.
எனவே சீரியல் குழு இப்போது புதியதாக நடிகர் பசுபதி மற்றும் ராதா ரவி இருவரிடமும் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்து கேட்டுள்ளார்களாம்.
சீரியலுக்கு முக்கியமான கதாபாத்திரமாக ஆதி குணசேகரன் ரோலில் யார் நடிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.