தளபதி விஜய் படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வெளிவந்த புகைப்படம், இதோ பாருங்க |

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.

இப்படத்தின் மூன்று போஸ்டர்கள் இதுவரை வெளிவந்துள்ள நிலையில், அடுத்ததாக Greatest Of All Time படத்தின் முதல் பாடல் வெளிவரவிருக்கிறது என தகவல் தெரிவிக்கின்றனர். இது விஜய் பாடிய பாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக டாப் 5 ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை கனிகா. இவர் வெள்ளித்திரையில் அஜித், மாதவன் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது விஜய்யின் Greatest Of All Time படத்திலும் நடிகை கனிகா நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெங்கட் பிரபுவுடன் நடிகை கனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் வெளிவந்த பின், கனிகா Greatest Of All Time படத்தில் நடிக்கிறார் என பேச்சு துவங்கிவிட்டது. இவர் இப்படத்தில் நடித்துள்ளாரா அல்லது டப்பிங் பேசியுள்ளாரா என உறுதியாக தெரியவில்லை. ஆனால், சமூக வலைத்தளத்தில் இப்படியொரு பேச்சு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.