'என்ன சொல்ல போகிறாய் பொங்கல்' ரிலீஸ்

கொரோனா பரவல் கருத்தில் கொண்டு தியட்டர்களில் 50% இருக்கைக்கு மட்டுமே தமிழக அனுமதி அளித்துள்ளதால் வலிமை,ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீசை தள்ளி வைத்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பல சிறிய பட்ஜெட் படங்கள் படத்தை பொங்கல் அன்று வெளியிட ஆயத்தம் ஆகியுள்ளார். அந்த வகையில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள 'என்ன சொல்ல போகிறாய்' படமும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் அஷ்வின் கதாநாயகனாக நடித்துள்ளார்.இப்படத்தை ஹரிகரன் இயக்கியுள்ளார்.