உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயல்!

உக்ரேனிய மக்களை ரஷ்ய இராணுவத்தில் சேர்ப்பது சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும் என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு மொஸ்கோவை எச்சரித்துள்ளது.ஆக்கிரமிக்கப்பட்ட கேர்சன் மற்றும் சபோரிஜியா பகுதி மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தியதாக உக்ரேனிய அதிகாரிகளின் கருத்தை மேற்கோளிட்டு இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.சர்வதேச சட்டத்தின்படி, அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களை தங்கள் இராணுவத்தில் சிப்பாய்களாக பணியாற்ற கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.