எக்ஸ் பாவனையாளர்களுக்கு பேரிடி! எலான் மஸ்க்கின் அதிரடி திட்டம்

எக்ஸ் (X) தளத்தில் உள்ள போலிக் கணக்குகளை நீக்குவதற்கான ‘Not a Bot’ எனும் சோதனை திட்டத்தை எக்ஸ் நிறுவனம் தற்போது முன்னெடுத்துள்ளது. 

இதன்படி, புதிதாக எக்ஸ் கணக்கை தொடங்குபவர்கள், எக்ஸ் தளத்தின் ட்வீட்களைப் பார்க்கவும், ஏற்னகவே உள்ள கணக்குகனை தொடரவும் மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) தெரிவித்துள்ளார். 

பதிவுகளை பதிவிடவும், கமென்ட் செய்யவும் வேண்டுமானால், வருடாந்தம் அல்லது மாதந்தம் குறிப்பிட்டத் தொகையை கணக்கு உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

சந்தா முறை

ட்விட்டர் (Twitter) எனும் பெயரை ‘எக்ஸ்' என மாற்றி ப்ளூ டிக், புதிய சந்தாக்கள், உள்ளிட்ட பல்வேறு புதிய நடைமுறைகளை எலான் மஸ்க் அறிமுகப்படுத்தினார்.

பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலையத்தளங்களும் இந்த சந்தா முறையைப் பின்பற்ற தற்போது ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில், தற்போது போலி கணக்குகளை இனங்காணவும் அவற்றை நீக்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

புதிய திட்டம் 

இதன்படி, எக்ஸ் நிறுவனத்திற்கு பாரிய இலாபத்தை ஈட்டிக்கொடுக்கும் திட்டங்களை எலான் மஸ்க் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

நியூசிலாந்து (New Zealand) மற்றும் பிலிப்பைன்ஸை (Philippines) சேர்ந்த புதிய எக்ஸ் பயனர்கள் மத்தியில் ‘Not a Bot’ திட்டம் தற்போது சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு நாடுகளினதும் புதிய பயனர்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சக் கட்டணமாக ஒரு அமெரிக்க டொலரை செலுத்தி, எக்ஸ் தளத்தில் பதிவிடுவது, கமெண்ட் செய்வது போன்ற எக்ஸ் தளத்தின் அடிப்படை வசதிகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

சோதனை கட்டத்தில் உள்ள இந்தத் திட்டம விரைவில் உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.