மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளியிட்டுள்ள தகவல்!


நாட்டின் மின்சார பாவனைக் கட்டணத்தை சுமார் 25% வரையில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் மற்றும் நிலக்கரியின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இலங்கையில் மின்கட்டணம் குறையும் நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர்,

"மின் பாவனைக்கான கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, கடந்த வருடம் ஒகஸ்ட் மற்றும் இவ்வருடம் ஜனவரி மாதங்களில் மின் கட்டண உயர்வினால் மின் பாவனை 20% குறைந்துள்ளது.

அதே சமயம், மின்சாரக் கட்டணம் 35 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது 65% அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மின் பாவனை குறைவடைந்துள்ளதுடன், எரிபொருள் விலைகள் முன்பே குறைந்திருக்க வேண்டும்." என ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.