தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது பற்றிய திகதி விபரங்கள் இன்று (21.01.2023) அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த சூழ்நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போது நடைபெறும் என்பது பற்றிய திகதி விபரங்கள் இன்று (21.01.2023) அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லை இன்று (21.01.2023) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகின்றது.

இன்று (21.01.2023) பிற்பகல் 1.30 மணி வரையில் வேட்பு மனுக்கள் குறித்த எதிர்ப்புக்களை வெளியிட கால அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் தொடர்பில் தெரிவத்தாட்சி அதிகாரிகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்காக கடந்த 4ஆம் திகதி முதல் 20ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அமைதியான முறையில் செயற்படுமாறு வேட்பாளர்களிடம் பெபரல் அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.