பட்டலந்தவின் எதிரொலி : ஜே.வி.பி. யால் கொல்லப்பட்ட 1300 ஐ.தே.க. உறுப்பினர்கள்

மக்கள் விடுதலை முன்னணியினால்   ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொள்ளப்பட்டுள்ளனர் அவர்களில் 1300 பேரின் பெயர் பட்டியலை சபைக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்து ரோஹினி கவிரத்ன எம். பி சபைக்கு சமர்ப்பித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை  இரண்டாவது நாளாக இடம் பெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்  நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு, பெயர் பட்டியலை சபைக்கு சமர்ப்பித்தார்.

இதன்போது அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

 மக்கள் விடுதலை முன்னணி ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள், உறுப்பினர்கள், என ஆயிரக்கணக்கில் கொலை செய்துள்ளார்கள்.

 இந்தியாவுடன் இணைந்து பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  இந்த கொலைகளை செய்தார்கள். இதில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் இதர கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அரசாங்கம் படலந்த அறிக்கையை முன்வைக்கும்போது சபாநாயகர் கலவைப்பட்டார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினால் கொலை செய்யப்பட்டவர்களின் நிலைதொடர்பில் சபாநாயகர் கவலைப்படுவார் என நினைக்கிறேன்.
 
அவர்களில் 1300 பேரின் பெயர் பட்டியலை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தப் பட்டியலில் இடம்பெறாதவர்களின் பெயர்கள் பட்டலந்த விவாதத்தின்' போது முன்வைக்க நடவடிக்கை எடுப்பேன்.

அத்துடன் இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் 920 பேரின் பெயர் பட்டியலையும் சபைக்கு சமர்ப்பிக்கிறேன். இந்திய எதிர்ப்பின்போது கொலை செய்யப்பட்ட 41813 பேருக்கும் நீதி கிடைக்கவேண்டும். அதனால் எந்த மனித புதைகுழியை தோண்டினாலும் இறுதியில் எஞ்சப்போவது கவலை மாத்திரமே இருக்கப்போகிறது என்றார்.