பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் பிரான்ஸ்!

பிரித்தானியாவில் இருந்து பயணிப்பவர்களுக்கான கட்டுப்பாடுகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிரான்ஸ் தளர்த்தும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி பிரான்சுக்குள் நுழைவதற்கு ஒரு கட்டாயக் காரணம் தேவையில்லை. அவர்கள் வரும்போது சுயமாக தனிமைப்படுத்த வேண்டியதில்லை.ஆனால், பிரித்தானியாவில் இருந்து புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட எதிர்மறையான கோவிட் சோதனை வரும் அனைவருக்கும் தேவைப்படும். பயண நிறுவனங்கள் இந்தச் செய்தியை வரவேற்றன. அத்துடன் விதி மாற்றத்திற்குப் பிறகு பிரான்ஸ் விடுமுறை முன்பதிவுகள் அதிகரித்தன.ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலை மெதுவாக்கும் முயற்சியில் பிரான்ஸ் டிசம்பர் 18ஆம் திகதி கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.தடுப்பூசி போடப்படாதவர்கள் பிரான்சுக்குள் நுழைவதற்கு இன்னும் ஒரு கட்டாயக் காரணம் தேவைப்படும் அவர்கள் வந்த பிறகும் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.