முக்கிய கடிதம் - தணிகிறதா டிரம்ப் கோபம் ...! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு (USA) அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) விரும்புவதாக தனது உரையில் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump ) உரையாற்றினார்.

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில், டிரம்பின் இந்த உரையே மிக நீளமானது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கியமான கடிதம்  

டரம்ப் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், யுக்ரேன் ஜனாதிபதியிடம் இருந்து ஒரு "முக்கியமான கடிதம்" தனக்கு கிடைத்ததாகவும் அது வொலோடிமிர் ஸெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்ட கருத்துகளுடன் பொருந்துவதாகத் தோன்றியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வரவும் "முடிந்த வரை விரைவில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவும்"  டிரம்பின் "வலுவான தலைமையுடன்" இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அவர் இந்தக் கடிதத்தை அனுப்பியதற்கு நான் நன்றி கூறுகிறேன் என்று டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்

உக்ரைன் விவகாரத்தில் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியை கடுமையாக விமா்சித்துவந்த ட்ரம்ப், இந்த உரையில் தனது கடுமையைத் தணித்திருந்ததாகக் கூறப்படுகிறது.