24 மணி நேரத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மத்திய வங்கி தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(16.06.2023) திடீரென உயர்வடைந்துள்ளது.

கடந்த வாரத்தில் இருந்து ரூபாவின் பெறுமதி   வீழ்ச்சியடைந்து டொலரின் பெறுமதி உயர்வடைந்து வந்ததுடன் கடந்த மூன்று நாட்களாக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்ததுடன் ஏனைய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது.

எனினும் இன்றையதினம் ரூபாவின் பெறுமதி சடுதியாக உயர்வடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (16.06.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை     319.66 ரூபாவாகவும், கொள்வனவு விலை    300.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை  242.98 ரூபாவாகவும், கொள்வனவு விலை  226.58 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி  351.01 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி    328.34 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி    409.46 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி     384.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.