அரச ஊழியர்களுக்கு பேரிடி - தாமதமடையப்போகும் மாதாந்த சம்பளம்


அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையில் புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரசு நிர்வாக தர மற்ற அற்ற அரச துறை ஊழியர்களுக்கு உரிய காலத்தில் சம்பளம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதேவேளை, அரசு நிர்வாக ஊழியர்களின் சம்பளத்தை சில நாட்களுக்கு தாமதப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான தனது புதிய வருமானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்பார்க்கப்படும் வருமானத்தைக் வழங்குவதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், வரும் வருமானத்தின் அடிப்படையில் ஜனவரி முதல் அடுத்த சில மாதங்கள் வரை அரசு தனது செலவுகளை நிர்வகிக்கும்.

இதன்படி, திறைசேரியின் திட்டங்களுக்கு அமைவாக அரசாங்கத்தின் செலவினங்களை நிர்வகிப்பதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

எனவே, அரசு நிர்வாகமற்ற ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் என்றும், நிர்வாக தர ஊழியர்களின் சம்பளம் சில நாட்கள் தாமதமாகும் என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.