அமெரிக்காவுக்கு பேரிடி : ஊடுருவியுள்ள ஹேக்கர்ஸ்

 அமெரிக்கப் பொருளாதாரத்தின் முக்கிய துறைகளுடன் இணைக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனங்களின் கணினி வலையமைப்புக்களில் ஹேக்கர்ஸ் ஊடுருவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐயும் இணையப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பாதுகாப்பு முகவரகமும் இது தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன.

இந்த ஹேர்க்கஸ் அமெரிக்காவின் முக்கிய பொருளாதாரத் துறைகளின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புக்களில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஊடுருவி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வேர்ல்ட் டைபூன் என்ற ஹேக்கர்ஸ், முக்கியமான பல துறைகளின் உட்கட்டமைப்பில் ஊடுருவியுள்ளமையை சி.ஐ.எஸ்.ஏ கண்டறிந்துள்ளது.

தேசிய பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் பராமரிப்பு ஆகிய துறைகளில் மிக மோசமான சைபர் தாக்குதல்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுக் கூறப்பட்டுள்ளன.