திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் தியாகப் பயணத்தின் ஆரம்ப நாளின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் இன்று புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

பரிசின் புறநகர பகுதியான ஆர்யெந்தே நகரில் அமைப்பட்ட நினைவுக் கல்லின் முன்பாக இன்று காலை நினைவு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.   

ஆர்யெந்தே வாழ் தமிழ் மக்களுடன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வுகள் தொடர்ந்தும் எதிர்வரும் நாட்களிலும் இடம்பெற்று எதிர்வரும் 26 ஆம் திகதி அடையாள கவனயீர்ப்பு உண்ணாநோன்புடன் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.