புலம்பெயர் சகோதரர்கள் அதிரடியாக கைது - பயங்கரவாத தொடர்பு குறித்து தகவல்


ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்கு ஜேர்மனியில் உள்ள நகரொன்றில் தொடர்மாடியில் வைத்து 32 வயது நபரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சையனைட் ரிச்சின் போன்ற இரசாயன பொருட்களை கொள்வனவு செய்துள்ளார் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் என வெளிநாட்டு புலனாய்வு அமைப்பொன்று தெரிவித்ததகவலை தொடர்ந்தே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேசமயம் கைதானவரின் சகோதாரர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த நபருக்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து காவல்துறைக்கு நன்கு தெரிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கைதான சகோதரர்கள் இருவரும் 2015 முதல் ஜேர்மனியில் வசித்துவருகின்றதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.