இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவில் ஜிவி பிரகாஷுக்கு தனுஷ் கொடுத்த சப்ரைஸ் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் தனுஷ் ராயன் படத்தை தொடர்ந்து “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தை ரோம்-காம் கதைக்களத்தில் உருவாக்கியுள்ளதுடன், ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் “கோல்டன் ஸ்பேரோ” பாடல் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இன்று வரை இந்த பாடலுக்கான வியூஸ் மற்றும் ரீல்ஸ் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
குட் நியூஸ் சொன்ன தனுஷ்
இந்த நிலையில், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” என்ற படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவலை பாடல் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இதன்படி, “காதல் ஃபெயில்” என்ற தலைப்பில் எதிர்வரும் 25 ஆம் தேதி பாடலொன்று வெளியாகவுள்ளதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடல் ஜென் Z சூப் பாடல் என்றும் கூறப்படுகிறது. “காதல் ஃபெயில்” பாடலை மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் ஆகிய முன்னணி இசைக்கலைஞர்கள் உருவாக்கியுள்ளனர். அத்துடன் இந்த பாடலை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.