தெலுங்கு பட இயக்குனருடன் இணையும் தனுஷ்

சுகுமார் இயக்கத்தில் உருவான புஷ்பா அல்லு அர்ஜுன் ,ரஸ்மிக்கா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.மேலும் தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். சுகுமார் இயக்கத்தில் அடுத்ததாக எந்த கதாநாயகன் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.அதன் படி இயக்குனர் சுகுமார் தனுஷியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.