தனுஷ் உறுதி செய்த அருண் மாதேஸ்வரன் படம்

கொரோனா தாக்கம் காலக்கட்டத்தில் கூட தனுஷ் நடித்த கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இப்போது ஹிந்தியில் தனுஷ் நடித்துள்ள அட்ராங்கி ரே படம், தமிழில் கலாட்டா கல்யாணம் என்கின்ற பெயரில் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளதுஇதன் பின் அவர் தமிழ், தெலுங்கில் நடிக்கவுள்ள படத்துக்கு வாத்தி என்ற டைட்டில் வைத்துள்ளதாக சமீப காலத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிப்பதாக உறுதி படுத்தி உள்ளார். அதிலும் அருண்   மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க கிடைத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கிய ரோக்கி படம் நேற்று வெளியாகியுள்ளது.