இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகியிருந்த படம் 800.கிரிக்கெட் விளையாட்டில் அவர் 800 விக்கேட்டுகளை வீழ்த்தியதால் இந்த தலைப்பில் அப்படம் உருவாக இருந்தது. இதில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்க இருத்தார். ஆனால் முத்தையா முரளிதரன் இலங்கை அதிபர் ராஜபக்க்ஸ வுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது வேடத்தில் விஜய்சேதுபதி நடிப்பதுக்கு எதிர்ப்பு எழுந்தன. இதை அடுத்து அந்த படத்தில் இருந்து விலகினார் விஜய்சேதுபதி. இந்நிலையில் இந்த படத்தில் தேவ் பட்டேல் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.
 
    
 
                                                 
                                                 
                
             
                
             
                
             
                
             
                
             
                
             
                
            