பணி இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனகொலபலாஸ்ஸ சிறையில் கழித்த முதல் நாளில் உணவு சாப்பிட மறுத்ததாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்றம், மேலும் யாருடனும் பேசவில்லை என்றும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை மேலும் தடுப்புக்காவலில் வைக்க செய்ய மாத்தறை நீதவான் நேற்று (20) உத்தரவிட்டார்.
தனி பாதுகாப்பு
சந்தேக நபரை சிறைச்சாலையின் தனி பாதுகாப்பு பகுதியில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், சிறை அதிகாரிகள் சந்தேக நபரான தேசபந்து தென்னகோனை சிறைச்சாலை பேருந்து மூலம் தும்பரா சிறைக்கு அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.