எரிபொருள் வழங்குமாறி கோரி தெஹிவளையில் ஆர்ப்பாட்டம் – கடும் வாகன நெரிசல்!

எரிபொருள் வழங்குமாறி கோரி, தெஹிவளையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியை மறித்து குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதால், கொழும்பு- காலி வீதியில் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

பிரதான வீதியில் மட்டுமன்றி, குறுக்கு வீதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், காலைவேளையில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

தெஹிவளையில் மட்டுமன்றி, கொழும்பில் பல இடங்களிலும் எரிபொருள் வழங்குமாறி கோரி இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.