தெமட்டகொட ருவானின் 10 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் அதிரடியாக பறிமுதல் : போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கியதாக தகவல்


போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக தெரியவந்த 100  மில்லியன் ரூபாய் மதிப்புள்ள,  தெமட்டகொட ருவானுக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்றை குற்றப் புலனாய்வுத் துறை கைப்பற்றியுள்ளது.

இந்தக் கட்டிடம் "தெமட்டகொட ருவான்" என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினருக்குச் சொந்தமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையுடன் இணைக்கப்பட்ட சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதே பிரிவு முன்னர் தெமட்டகொட ருவான், அவரது மனைவி, மகன் மற்றும் சகோதரி பெயர்களில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாள உலக உறுப்பினர்களால் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் குறித்து நீண்டகாலமாக நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக இந்தக் கட்டிடம் கைப்பற்றப்பட்டதாக சிரேஷ்ட  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.