இந்தியாவில் குறைவடைந்து செல்லும் தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றைய தினத்தை விட குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 251209 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேநேரம் நேற்று மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளதுடன் 347443 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.மேலும் தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 15.88 வீதமாக உயர்ந்துள்ளதுடன், நாடு முழுவதும் 2105611 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.