இலங்கைக்கான கடன் விவகாரம் - சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை; வெளியானது புதிய அறிவிப்பு!


இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி தொடர்பான தீர்மானம், கடன் நிவாரணம் தொடர்பாக இருதரப்பு கடன் வழங்குநர்கள் வழங்கும் உடன்படிக்கைகளை பொறுத்தே அமையும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட நிதி வசதி குறித்த பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய உடன்படிக்கைகள் பெறப்பட்டவுடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா, பாரிஸ் கிளப், பிணை முறியாளர்கள் உட்பட்ட இலங்கைக்கு கடன் வழங்குநர்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் இலங்கையின் கடனில் 52 வீதத்தைக்கொண்டுள்ள சீனா மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு பொருத்தமற்ற இரண்டு வருட கடன் கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

பணியாளர் ஒப்பந்தம், கடனாளிகளிடமிருந்து தொடர்புடைய உடன்படிக்கைகள் பெறப்பட்டவுடன், இதன் மூலம் இலங்கைக்கு அத்தியாவசியமான நிதி வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.