ஈரான் ஜனாதிபதியின் மரணம் : மோசமான உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம்



ஈரான் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார். குறித்த தகவலானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
 
கடந்த 2022ல் சிறப்பு பொலிசாரின் காவலில் மஹ்ஸா அமினி ஆயாளய யுஅini என்ற இளம்பெண் மரணமடைந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் வெடித்த தொடர் ஆர்ப்பாட்டங்களை மிகக் கொடூரமாக எதிர்கொண்டவர் இப்ராஹிம் ரைசி.

முறையாக ஹிஜாப் அணியாததை அடுத்து கைதான மஹ்ஸா அமினி ஆயாளய யுஅini பொலிசாரின் கொடூர தாக்குதலில் மரணமடைந்தார்.
தற்போது ஜனாதிபதி ரைசியின் மரணம், அவரது இடத்திற்கான போட்டியை அதிகார மையத்தில் உருவாக்கும் என்றே நிபுணர்கள் தரப்பின் கணிப்பாக உள்ளது.

அப்படி ஒரு நிலை உருவானால், அது நாட்டில் கலவரங்களை உருவாக்கும் என்றும் கூறுகின்றனர். ஈரான் நாட்டை பொறுத்தமட்டில் உண்மையான மொத்த அதிகாரமும் உச்சத் தலைவரின் வசமே உள்ளது, ஜனாதிபதியிடம் அல்ல.

ஆனால் அதிகார பகிர்வு தொடர்பில் மோதல் ஏற்படும் என்றால், ஈரான் மீண்டும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக பிரித்தானிய வரலாற்றாசிரியர் ஆண்டனி க்ளீஸ் யுவொழலெ புடநநள தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியலமைப்பு விதிகளின் அடிப்படையில் தற்போது ஜனாதிபதி பொறுப்பு 68 வயதான முகமது மொக்பர் ஆழாயஅஅநன ஆழமாடிநச என்பவரிடம் ஒப்படைக்க வாய்ப்புள்ளது. இவர் உச்சத் தலைவருக்கு மிக நெருக்கமானவர் என்றே கூறுகின்றனர்.

இன்னொருவர் 55 வயதான மோஜ்தபா கமேனி ஆழதவயடிய முhயஅநini. இவர் உச்சத் தலைவரின் மகன். இவர் ஜனாதிபதியாக தெரிவானால் நாட்டில் பெரும் விவாதங்கள் ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.