உக்ரேனை சமாளிப்பது மிகவும் கடினம் - டொனால்ட் டிரம்ப்


 உக்ரேன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரேனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

உக்ரேன் கிடைக்கும் வாய்ப்பில் வேலையை முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 
அத்துடன் “அவர்கள் உக்ரேனை தொடர்ந்து தாக்குகிறார்கள். இந்த விடயத்தில் உக்ரேனை சமாளிப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது”.


 ரஷ்யாவிடம் அனைத்து வாய்ப்புகளும் உள்ளன, அவர்களிடம் சிறப்பான நிலைமை இருந்த போதிலும், அவர்களை சமாளிப்பது சுலபமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

 இதேநேரம் அமெரிக்க  முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் காலத்தில் அமெரிக்காவிற்கு சென்ற ஆயிரக்கணக்கான உக்ரைனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்துச்செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

உக்ரேனியர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்வதுகுறித்து ஆராயப்படுகின்றதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ட்ரம்ப் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில்  கருத்து தெரிவித்த ட்ரம்ப் “இது குறித்து நான் ஆராய்கின்றேன்,நாங்கள் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை நிச்சயமாக அவர்களை காயப்படுத்த விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் உக்ரேனை சேர்ந்தவர்களிற்கு விசா வழங்கியது குறித்து இரு வேறுபட்டகருத்துக்கள் உள்ளன நான் விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன் எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக உக்ரேனை சேர்ந்தவர்களிற்கு வழங்கப்பட்ட விசாக்களை இரத்து செய்யும் நடவடிக்கைகளை அடுத்தமாதம் நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளியான தகவல்கள் தவறானவை இது குறித்து எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை என வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

ஜோபைடனின் ஆட்சிக்காலத்தில் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து மற்றும் உக்ரேனிற்காக ஒன்றிணைதல் திட்டங்களின் கீழ் 200,000க்கும் அதிகமான உக்ரேனியர்களிற்கு அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் உக்ரேனிற்காக ஐக்கியப்படும் திட்டத்தை டிரம்ப் இடைநிறுத்தியிருந்தார்.

இதேவேளை ஜோபைடன் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு பத்து நாட்களிற்கு முன்னர் தற்காலிக பாதுகாப்பு அந்தஸ்த்து விசாக்களை 2026வரை நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.