தியாகதீபம் திலீபனின் நான்காம் நாள் உண்ணாவிரத நினைவேந்தல்!

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் உண்ணாவிரத அறப்போராட்டத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று (18.09.2023) பல்கலைக்கழக பிரதான வளாக பொதுத் தூபியில் மாணவர்களால் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அழகராசா விஜயகுமார் முன்னிலை வகிக்க, முகாமைத்துவ மற்றும் வணிக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர் ஆர்.கஜன் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தின நினைவேந்தல்கள் மாணவர்களால் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.