தனது முறைகேடான செயலால் சர்ச்சையில் சிக்கி மன்னிப்பு கேட்ட தலாய்லாமா


திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் தன்னிடம் ஆசிபெற வந்த சிறுவனிடம் தவறாக நடந்துகொண்டமை மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தன்னிடம் ஆசி பெற வந்த சிறுவனின் அவர் நடந்து கொண்ட விதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இதுதொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதில் சிலர், இந்த தவறான நடத்தையை நியாயப்படுத்த முடியாது எனவும் இது அருவருப்பானது, தலாய்லாமாவை கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். சிறுவன், சிறுவனது குடும்பம் மட்டுமல்லாது உலகிலுள்ள மக்கள் அனைத்து மக்களிடமும் மன்னிப்பு கேட்பதாக தலாய்லாமா கூறியுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர், ‘என் செயல் காயப்படுத்தி இருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சிறுவன் என்ற முறையில் விளையாட்டுத் தனமாக கிண்டல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது இடத்தில் கமரா முன் விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த 2019ம் ஆண்டு அடுத்த தலாய்லாமா ஒரு பெண்ணாக இருந்தால் அவர் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என தலாய்லாமா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இது தொடர்பில் அவர் மன்னிப்பு கேட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.