யாழ் - சென்னைக்கு இடையில் நாளாந்த விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை தொடர்பிலான புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனம் நாளாந்த விமான சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும் என்றும் வடக்கின் பொருளாதாரத்தை உயர்ந்தும் என்றும் இலங்கை விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய கால அட்டவணையின் ஒரு பகுதியாக இந்தியாவில் இருந்து விமானம் 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.