சைபர் அச்சுறுத்தல்: வெகுமதியை அறிவித்தது அமெரிக்கா



அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைக் குறிவைக்கும் சைபர் அச்சுறுத்தல் குழு தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெகுமதியாக வழங்குவதாக அமெரிக்க சட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஏ.பி.ரி 31 என்ற பெயர் கொண்ட இணைய அச்சுறுத்தல் குழு அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல தரப்பினரையும் இலக்கு வைத்துள்ளதாகவும் அவர்களுக்கு எதிராகத் தொடராக  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இக்குழுவின் சைபர் அச்சுறுத்தல்கள் குறித்து பல நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளதோடு சீன பிரஜைகள் ஏழு பேருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி அவர்களது பெயர்களையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.