இந்தியாவை தொடர்ந்து இலங்கையிலும் கொடூரம் : ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு




ஹம்பாந்தோட்டை மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ஐந்து வயது சிறுவன் ஒருவன் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்துள்ளான்.

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் சிறுவன் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் உடனடியாக கட்டுவான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேலதிக சிகிச்சைக்காக வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இந்தியாவின் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.