இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 16051 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 4 கோடியே 21 இலட்சத்து 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதேநேரம் தொடர்ச்சியாக 200000ற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களில் 8000ற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நேற்று மாத்திரம் 206 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 512000 கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.