அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா!

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியானதை நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “ எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.