கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா!

மும்பையில் இருந்து 2000 பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து 1471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2000 சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா சொகுசு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.இந்நிலையில் குறித்த கப்பல் கோவாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையில், ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து கப்பல் வாஸ்கோவிலுள்ள மோர்முகாவ் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, அதில் பயணித்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கப்பல் ஏஜெண்ட் ஜெஎம்.பாக்சி கூறியுள்ளார்.குறித்த பரிசோதனை முடிவுகளில் கப்பலில் இருந்த 66 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.