சன் டிவியின் சமையல் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி?

சன் டிவியின் சமையல் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி கனி கலந்துகொள்ளவிருக்கிறார்.இயக்குநரின் அகத்தியனின் மூத்த மகள் கனி. தீராத விளையாட்டு பிள்ளை,நான் சிகப்பு மனிதன் படங்களை இயக்கிய திருவின் மனைவி கனியின் மற்ற சகோதரிகளான விஜயலட்சுமி, நிரஞ்சனி சினிமாவில் கதாநாயகிகளாக களமிறங்க கனி நிகழ்ச்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.

சமீப காலமாக தனது யூடியூப் பக்கத்தில் பொன்னியின் செல்வன் கதையை மிக எளிமையாக கூறிவருகிறார். முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்டு அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளரானார்.இந்த நிலையில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் சமையல் நிகழ்ச்சியில் கனி கலந்துகொள்கிறாராம். ஆனால் அவர் போட்டியாளராக கலந்துகொள்ளப்போவதில்லை.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார். கனி சமையலில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சுவாரசியமாக இருக்கும்.