உக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ் 'ஒரு சர்வாதிகாரி' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான பிளவை ஆழப்படுத்தியுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சவுதி அரேபியாவில் இடம்பெற்ற அமெரிக்க - ரஷ்ய பேச்சுவார்த்தைகளில் தமது தரப்பு புறக்கணிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்ட உக்ரேன் ஜனாதிபதி, 'ரஷ்யாவின் தவறான தகவல்களுடன் அமெரிக்க ஜனாதிபதி உள்ளார்' என விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரேன் ஜனாதிபதி 'விரைவில் முன்னோக்கிச் செல்ல வேண்டும்' எனவும், 'இல்லையெனில் அவருக்காக ஒரு நாடும் இருக்கப் போவதில்லை' எனவும், குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உக்ரேன் ஜனாதிபதியை 'சர்வாதிகாரி' என விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக ஜேர்மனி சான்ஸ்லர் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.