தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெற்று வரும் தீவிர மோதல்கள் கிட்டத்தட்ட முடிவை எட்டி இருப்பதாகவும், ஆனால் அது போர் முடிவுக்கு வந்தாக அர்த்தமில்லை என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பை அதிகாரத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றும் வரை போரைத் தொடர்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
இதில் ஹிஸ்புல்லாவுடனான பரஸ்பர மோதல் தீவிரம் அடைந்திருக்கும் சூழலில் லெபனானுடனான எல்லைப் பகுதியில் விரைவில் துருப்புகளை நிலைநிறுத்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் இஸ்ரேலிய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கருத்து வெளயிட்டுள்ள அவர்
‘முடிவில் இரண்டு விடயங்களை செய்ய வேண்டி உள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவமயமற்ற நிலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதோடு சிவில் நிர்வாகம் ஒன்றை நிறுவ வேண்டி உள்ளது. பிராந்தியத்தில் உள்ள குறிப்பிட்ட நாடுகளின் ஆதரவு மற்றும் நிர்வாகத்துடன் அதனை செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். முன்னோக்கிச் செல்வதற்கு சரியான வழி இது என்று நான் நம்புகிறேன்’ .
‘பலஸ்தீன நாடு ஒன்றை நிறுவுவதற்கு நான் தயாரில்லை. பலஸ்தீன அதிகார சபையிடம் (காசாவை) கையளிக்க நான் தயாரில்லை’ என்றும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
பிரதான வலதுசாரி தொலைக்காட்சி ஒன்றுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நெதன்யாகு பேட்டி அளித்திருந்தார். ஒக்டோபர் 7 இல் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் நெதன்யாகு அளித்த முதல் தொலைக்காட்சி நேர்காணலாக இது இருந்தது.
‘காசா பகுதியில் தீவிர நிலை முடிவுக்கு வந்த பின், பாதுகாப்பு நோக்கத்திற்காக சில படையினரை வடக்கில் இஸ்ரேல் மீண்டும் நிலைநிறுத்தவுள்ளது’ என்று நெதன்யாகு குறிப்பிட்டார்.
லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்புடன் முழு அளவில் போர் வெடிக்கும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே நெதன்யாகு இதனைத் தெரிவித்துள்ளார்.