இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாரான இசையமைப்பாளர்!

இசையமைப்பாளர் டி.இமான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.டி.இமான், 2008 ம் ஆண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரான மோனிகா என்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வெரோனிகா டோரத்தி இமான், பிலேசியா காத்தி இமான் என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்த தகவலை இமான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சோஷியல் மீடியாவில் அறிவித்தார்.இருவரும் மனம் ஒத்து பிரிவதாக முடிவெடுத்து, சட்டப்படி விவாகரத்து பெற்றதாக இமான் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலின்படி, இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறாராம்.இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையை சேர்ந்த உமா என்பவரை தான் இமான் திருமணம் செய்து கொள்ள போகிறாராம்.இது வீட்டில் பார்த்து நடத்தி வைக்கப்படும் திருமணமாம். இவர்களின் திருமணம் மே மாதம் நடைபெறலாம் என கூறப்படுகிறது.இமான் மற்றும் உமா குடும்பத்தை சேர்ந்தோர் கலந்து பேசிய பிறகு, இது பற்றி முடிவு செய்ய போகிறார்களாம். விரைவில் இமான் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.