இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அபு அரகபா கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரமான தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர்.அதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதோடு பலர் பயணக்கைதிகளாக கடத்திச் செல்லப்பட்டனர்.

அதன் பின்னர் இஸ்ரேலிய பிரதமர் அதிரடியாக போர் பிரகடனம் அறிவித்து ஹமாஸ் அமைப்பிற்கு தொடர்ந்து பதிலடி வழங்கி வருகின்றார், இருதரப்பிற்கும் இடையிலான மோதல் முற்றியதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போரினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேல் காசாமுனையில் தொடர் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் போது, இஸ்ரேல் விமானப்படை இன்று நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் ட்ரோன் பிரிவு தளபதி அபு அரகபா கொல்லப்பட்டடுள்ளார்.

அதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வின் போது, மத்திய கிழக்கில் நீடித்த மனிதாபிமான போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.